மும்பையில் குடியேறியதால் தென்னிந்திய படங்களில் நடிக்க மறுப்பதில்லை என்றார் டாப்ஸி. ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி.
தென்னிந்தியாவில் வீடு எடுத்து தங்கி இருந்த இவர் திடீரென்று மும்பைக்கு குடியேறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: எனது குடியிருப்பை மும்பைக்கு மாற்றியதால் தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது.
பாலிவுட்டில் மட்டுமே எனது கவனத்தை செலுத்துகிறேன் என்பது தவறு. தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடிப்பேன். தென்னிந்திய படவுலகினருக்கு என்னை நன்கு தெரியும். ஆனால் பாலிவுட்டில் என்னை பலருக்கு தெரியாது. அவர்கள் என்னைப்பற்றி தெரிந்துகொள்ளவே அங்கு சென்று தங்கினேன்.
மும்பையில் இருக்கும்போது சொந்த வீட்டில் தங்கி இருக்கும் ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான் நடித்த ஆரம்பம் நல்ல வசூலுடன் ஓடியது. இப்படி இருக்கும்போது பாலிவுட்டுக்கு நான் ஏன் செல்ல வேண்டும்.
என்னுடைய சம்பளத்தை எப்படி சரியாக வாங்க வேண்டும் என்றும், சலுகைகாட்டி பெற்றுக்கொள்வதுபற்றியும் நன்றாக தெரியும். தற்போது முனி 3, வை ராஜா வை மற்றும் இந்தி படமான ரன்னிங் ஷாதி டாட் காம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு டாப்ஸி கூறினார்
0 comments:
Post a Comment