சந்திரகாந்தா நாடகக் குழுவின் மிகப் பிரம்மாண்டமான நாடகம் மணியன் எழுதிய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ இந்த நாடகத்திற்கு இசையமைக்கும் பொறுப்பு பாவலர் பிரதர்ஸ் குழுவைச் சேர்ந்தது.
சந்திரகாந்தாவின் நெருங்கிய உறவினர் மணிமேகலை என்கிற கலா என்ற பெண், தவறாமல் நாடகத்திற்கு வருவாள்.
அந்தப் பெண்ணுக்கு இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு கிதார் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
கிதார் வாத்தியத்தின் தந்திகளை மீட்டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த கங்கை அமரன் அந்தப் பெண்ணின் மனத்தை நேசிக்க இருவரிடையே காதல் பிறந்தது.
இலைமறைவு, காய் மறைவாக இருந்த காதல் மெதுவாக வளர்ந்தது. அமரனின் இந்தக் காதலைப் பற்றி அறிந்து பாலு அவரது காதல் நிறைவேற வள்ளி கல்யாணத்துக்கு உதவி செய்த விநாயகப் பெருமான் மாதிரி, இருவரிடையே தூது போனார்.
இறுதியில் கங்கை அமரன் கல்யாணத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் பாலு. இன்றும் மேடையில் கங்கை அமரன் பாலுவைப் பார்த்து ‘எனக்கு கல்யாணம் பண்ணிவச்ச பிள்ளையார் (உடம்பு சைஸைப் பார்த்து) இவர்தான்’ என்று கூறி ரசிகர்களைச் சிரிக்க வைப்பது வழக்கம்.
0 comments:
Post a Comment