அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் அடுத்து தயாரித்து வரும் படம் முண்டாசுபட்டி, விஷ்ணு, அட்டக்கத்தி நந்திதா நடிக்கிறார்கள்.
நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் முதல் இடம்பிடித்த முண்டாசுபட்டி குறும்படத்தை அப்படியே பெரும்படமாக இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ராம். பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. முண்டாசு பட்டியின் கதை இதுதான்.
1980களில் நடக்கிறது கதை. அப்போது கேமரா வைத்திருப்பவன் பெரிய சமூக அந்தஸ்தை பெற்றவனாக இருப்பான். கார் வைத்திருப்பவர்களையும், கேமரா வைத்திருப்பவர்களையும் பெருமையோடு பார்ப்பார்கள். ஆனால் முண்டாசுபட்டி மக்களுக்கு மட்டும் கேமராவை கண்டாலே பிடிக்காது.
போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்பதை உறுதியாக நம்புகிறவர்கள். அதனால் ஊர் எல்லையில் "யாரும் கேமராவுடன் ஊருக்குள் வரக்கூடாது, படம் பிடிக்க கூடாது" என்று போர்டே வைத்திருப்பார்கள்.
படத்தின் ஹீரோ விஷ்ணு, கேமரா பைத்தியம் எதையாவது போட்டோ எடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை. முண்டாசுப்பட்டியில் ஒரு பெரியவர் இறந்து விடுகிறார். ஒரு சொத்து சம்பந்தமான வழக்கிற்கு அவரது போட்டோ தேவைப்படுகிறது. இதனால் இறந்த பெரியவரை போட்டோ எடுக்க விஷ்ணுவும் அவரது நண்பர்களும் அழைத்து வரப்படுகிறார்கள்.
அவர்களை கண்டதும் கிராம மக்கள் வீட்டை பூட்டி ஒளிந்து கொள்வார்கள். காரணம் நம்மை போட்டோ எடுத்துவிடுவார்களோ என்ற பயம். இறந்த பெரியவரை படம் எடுத்து வந்து பிலிமை கழுவிப் பார்த்தால் டெக்னிக்கல் ப்ராப்ளம். போட்டோ பதிவாகவில்லை.
இறந்த பெரியவரை அவர்கள் புதைத்து விடுகிறார்கள். இனி அவரை போட்டோ எடுக்க முடியாது, எடுத்த போட்டோவும் பதிவாக வில்லை. இதனால் ஆத்திரம் அடையும் பெரியவர் குடும்பம் விஷ்ணு அண்ட் கோவை அள்ளிக் கொண்டு வந்து ஒரு தண்டனை கொடுக்கிறது.
அந்த தண்டனையை விஷ்ணுவும் அவரது நண்பர்களும் எப்படி அனுபவிக்கிறார்கள். அதற்கு பெரியவர் குடும்பத்து பெண் நந்திதாவை விஷ்ணு எப்படி காதலிக்கிறார் என்பதுதான் கதை.
அந்த தண்டனை என்னவென்று சொல்லட்டுமா... அஸ்கு புஸ்கு படம் ரிலீசானதும் தியேட்டர்ல பாருங்க.
0 comments:
Post a Comment