சத்யராஜ் தயாரிப்பில் அவரது மகன் நடித்து வரும் படம் நாய்கள் ஜாக்கிரதை.
இந்த படத்தை இயக்குகிறார் சத்தி சௌந்தரராஜன். இவர் ஏற்கனவே நாணயம் படத்தை இயக்கியவர். சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடிக்கிறார்.
மற்றும் மனோபாலா, ஆர்.ஜே.பாலாஜி, குறும் படம் புகழ் வெங்கட் சுந்தர், கூத்துப்பட்டறை கலைஞர்கள் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். நிசார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்துக்கு தரண்குமார் இசையமைக்கிறார்.
இதில் கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில் பயிற்சி பெற்ற ராணுவ புலனாய்வு நாய் ஒன்றும் நடிக்கிறது. சமீபத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே, படப்பிடிப்பை சென்னை, ஊட்டி, பாலக்காடு போன்ற இடங்களில் நடத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக குலுமணாலி செல்கிறார்கள்.
இந்த நாய் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் குலுமணாலியில் படமாக்கப்பட இருக்கின்றனவாம். அத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பட வரலாற்றில் ஒரு நாய், கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை
0 comments:
Post a Comment