டைரக்ஷன் பணியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார் பிரியதர்ஷன். தமிழில் காஞ்சிவரம், லேசா லேசா, கோபுர வாசலிலே, சிநேகிதியே போன்ற படங்களும் மலையாளம், இந்தியிலும் சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன்.
சமீபத்தில் இவருக்கும் மனைவி லிசிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் பரவியது. அவர்களது குடும்ப நண்பர்கள் தலையிட்டு சமரசம் செய்துவைத்ததை அடுத்து இப்பிரச்னை சுமுகமாக முடிவடைந்தது.
இந்நிலையில் பிரியதர்ஷன் டைரக்ஷன் பணியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. சில சொந்த காரணங்களுக்காக இனி அவர் படங்கள் இயக்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளார். ஆனால் கேரளாவில் அவர் ஏற்றுள்ள சலசித்ரா அகடமியின் தலைவர் பொறுப்பை தொடர்ந்து வகிப்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரியதர்ஷன் இயக்கத்தில் கடைசியாக மோகன்லால் நடித்த கீதாஞ்சலி என்ற மலையாள படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றி பெறவில்லை. இதற்கிடையே பிரியதர்ஷனின் இந்த முழுக்கு முடிவை அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment