ஜெட் வேகத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் சிவகார்த்திகேயன் தற்பொழுது மான் கராத்தே திரைப்படத்தில்
நடித்துவருகிறார்.
மான் கராத்தே திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்துவரும் தருவாயில், இவர் நடிக்கவிருக்கும் அடுத்த படமான டானா
திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற மார்ச் 6 ஆம் தேதி துவங்கவுள்ளன.
சிவகார்த்திகேயன் - பிரியா ஆனந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படமான எதிர் நீச்சல் திரைப்படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவிருக்கும் இரண்டாவது திரைப்படம் டானா.
இப்படத்தினையும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ஹீரோயினாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்திகேயனுடன் இணைந்து நடித்த ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
எதிர்நீச்சல் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணியான சிவகார்த்திகேயன் - துரை செந்தில்குமார் - அனிருத் ஆகியோர் இணைவதால் இப்படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
சிவகார்த்திகேயன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

0 comments:
Post a Comment