Saturday, 1 March 2014

Leave a Comment

இதோ, உத்தமவில்லன் உலகநாயகன்...!



உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள உத்தமவில்லன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷீட்டிங்கே நாளை மறுதினம்தான் துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்வரூபம் -2 திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கவுள்ள திரைப்படம் உத்தமவில்லன். நகைச்சுவைத் திரைப்படமான இப்படத்தினை ரமேஷ் அர்விந்த் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற மார்ச் 3 ஆம் தேதியன்று துவங்கவுள்ளன.

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையில் தங்களை மிஞ்ச யாருமில்லை என்ற அளவில் பட்டையைக் கிளப்பும் கமல்ஹாசன் - கிரேசி மோகன் கூட்டணியில் இப்படம் உருவாகவுள்ளது.

தமன்னா, திரிசா, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நடிக்கலாம் என்று கூறப்பட்டபோதும் தற்பொழுது விஷ்வரூபம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்த ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டுவருகிறது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

0 comments:

Post a Comment