உலக நாயகர் நண்பருக்காக வில்லன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இப்படத்தின் போஸ்டர்களை வித்தியாசமான முகத்துடன் தோன்றுவது போன்ற புகைப்படத்துடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பரபரப்பு ஏற்படுத்தியவருக்கு அதைத் தொடர்ந்து சர்ச்சையும் வந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தின் மாதிரி வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்ததாம்.
அந்த புகைப்படத்தை அப்படியே காப்பி அடித்து இந்த படத்துக்காக போஸ்டர் தயாரித்துள்ளனராம்.
இதனால் சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர் கோர்ட்டுக்கு செல்ல முடிவெடுத்துள்ளாராம்.
பொதுவாக, படம் எடுத்து முடிந்த பிறகுதான் உலக நாயகருக்கு பிரச்சினை வரும். தற்போது படம் ஆரம்பிக்கும் முன்னரே பிரச்சினை வந்துள்ளதால் உலக நாயகர் கலக்கத்தில் உள்ளாராம்.
அடுத்து என்ன முடிவெடுப்பது என படக்குழுவினருடன் கலந்து ஆலோசித்து வருகிறாராம்.

0 comments:
Post a Comment