Thursday, 13 March 2014

Leave a Comment

காரணத்தை கேட்டால் கடுப்பாயிடுவிங்க...!



வேட்டையாடிய படத்தில் நடித்த அந்த மும்பை நடிகைக்கு, திடீரென சென்ற மாதம் தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடந்தது.


குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடத்தாமல் திடீரென இரண்டு மாதங்களுக்கு முன்பே அவசர அவசரமாக இருவீட்டினரும் சேர்ந்து திருமணத்தை நடத்தி முடித்தனர்.


காரணம் கேட்டதற்கு மாப்பிள்ளை வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அவர் திரும்பி வர ஒருவருடத்திற்கும் மேல் ஆகும் என்பதால் அவசரமாக திருமணம் நடத்துவதாக கூறினர்.


ஆனால் திருமணம் முடிந்து வெளிநாட்டுக்கு சென்ற ஜோடிக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, ஒரே மாதத்தில் நடிகை மட்டும் மீண்டும் மும்பைக்கு திரும்பிவிட்டார்.


தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க பிரபல இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார்.


மணமான ஒரே மாதத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மும்பை பத்திரிகை ஒன்றில் கிசுகிசு கிளம்பியுள்ளது. ஆனால் நடிகை இதுகுறித்து வாய் திறக்கவில்லை.

0 comments:

Post a Comment