சென்னை தெருமுனையில் நடக்கும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் 'சென்னை 600 028'.
இப்படத்தை எஸ்.பி.பி. சரண் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கினார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் ஜெய், சிவா, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி மற்றும் அகத்தியன் மகள் விஜயலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது 'சென்னை 600 028' இந்தியில் ரீமேக் ஆகிறது.
டி.ஏ.ஆர் மோசன் தயாரிக்கும் இப்படத்திற்கு 'கிர்கிட்' எனப் பெயர் வைத்துள்ளனர்.
யாசாத் இப்படத்தை இயக்குகிறார். இவர் பிஜாயிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
இதில் பல புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இப்படத்திற்கு தேவையான 'தாஹி ஹாந்தி' எனும் உரியடிப்பு திருவிழா காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ளது.
இப்படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அனுகியுள்ளனர்.
0 comments:
Post a Comment