Monday, 3 March 2014

Leave a Comment

சூப்பர் ஸ்டாரை குழப்பிய பார்ட் - 2 க்கள்...!



கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கோச்சடையான் படத்தில் நடித்துவந்ததால் சூப்பர் ஸ்டாரின் அடுத்தபடம் எது எது என்ற கேள்விகள் அதிகமாக எழாமல் இருந்துவந்தன.

தற்பொழுது கோச்சடையான் திரைப்படம் முழுவதும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராகிவிட்டது.

 இந்நிலையில் ரஜினியின் அடுத்தபடம் எது என்ற கேள்விக்கு ஆளாளுக்கு அளந்து விட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று கிளப்பிவிட்டார்கள்.

 ஆனால்

கே.எஸ்.ரவிக்குமார் அதனை தெளிவாக மறுத்திருந்தார். பின்னர் சில காலத்திற்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் பார்ட் -2
வில் ரஜினி நடிப்பார் என்று வதந்திகள் கிளம்பின.

ஷங்கர் தனது ஐ பட வேலைகளை நிறைவு செய்துவிட்டதாகவும், அதற்குப் பிறகு அவர் எந்திரன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புவதாகவும், சூப்பர் ஸ்டார் தற்பொழுது கோச்சடையான் பட வேலைகளை முடித்துவிட்டு ஓய்வில் இருப்பதால் விரைவிலேயே எந்திரன் -2 பட வேலைகள் துவங்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.

 இதையெல்லாம் தாண்டி தற்பொழுது மீண்டும் ரஜினிகாந்த் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதாக கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

ரஜினியின் அடுத்த படம் குறித்து அவரே வாயைத் திறக்கும்வரையிலும் எதையும் நம்புவதற்கில்லை.

0 comments:

Post a Comment