ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரவரிசை செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு தரவரிசை செய்யப்பட்ட 100 பல்கலைக்கழகங்களில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.
உலகில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த கல்வியாளர்கள், உலகின் முக்கிய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், திறன்களை மதிப்பீடு செய்து, அவற்றில் மிக சிறந்த 100 பல்கலைக்கழகங்களை தரவரிசை படுத்தி உள்ளனர்.
அந்த பட்டியலில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.
அதை தொடர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ கங்கள் உள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் பணியாற்றிய பஞ்சாப் பல்கலைக்கழகம் 300க்குள் இடம்பிடித்தது.
டெல்லி, கான்பூர், கோரக்பூர் மற்றும் ரூர்க்கி ஆகிய இடங்களில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் 400க்குள் இடம்பிடித்தன. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் 200வது இடம் பிடித்தது.
0 comments:
Post a Comment