மாடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு டைரக்டர் பிரியதர்ஷன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் திரிஷா.
பொதுவாக த்ரிஷா என்றாலே ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். அந்த வகையில் சமீபகாலமாக அவரைப் பற்றிய செய்தி திருமணத்தை பற்றி தான்.
தெலுங்கில் பிரபல நடிகர் ராணாவுக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், விரையில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதற்கிடையில் த்ரிஷா வெளியிட்டுள்ள செய்தியில், காதல், திருமணம் இதெல்லாம் நாமாக முடிவு செய்ய முடியாது. எப்போது நடக்குமோ அப்போது அது தானாக நடக்கும்.
நானும் அந்த நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
அதனால் நேரம் கைகூடி வரும்போது அந்த மகிழ்ச்சியான செய்தியை நானே அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment