அஜீத்தின் அடுத்த படம் தொடங்குவது இன்கம்டாக்ஸ் அலுவலர்கள் கையில்தான் உள்ளதாம்... அதென்ன... இன்கம்டாக்ஸ் பார்ட்டிகள் இங்கே எங்கே வந்தார்கள் என்கிறீர்களா? எல்லாம் ஆரம்பம் படத்தின் வசூல் கணக்கை சரியாகக் காட்டாததால் வந்த தொல்லையாம்.
விஜய்யை வைத்து கில்லி, குஷி என இரண்டு வெற்றிப் படங்கள் எடுத்தவர் ஏஎம் ரத்னம். இந்தப் படங்கள் விஜய்யின் மார்க்கெட் மதிப்பை பெரிதும் உயர்த்தின. ஆனால் ரத்னம் பெரும் சிரமத்தில் சிக்கித் தவித்த போது அவர் விஜய்யிடன் போய் கால்ஷீட் கேட்டு ஆண்டுக்கணக்கில்
இதற்காக விஜய் நடித்த 'நண்பன்' பட புரொடக்ஷன் வேலைகளைக் கூட தாமாக முன்வந்து செய்து கொடுத்தார் ரத்னம். அப்படியிருந்தும் விஜய் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் ரத்னம் கேட்காமலே ஓடிவந்து 'ஆரம்பம்' படத்திற்கு கால்ஷீட் கொடுத்தார் அஜீத். அந்தப் படம்தான் ஆரம்பம். இந்தப் படத்தில் பெரிய லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஏ.எம்.ரத்னத்திற்கே அஜீத் கால்ஷீட் கொடுத்தார். கவுதம் மேனன் இயக்கப்போகும் இந்தப் படம் விரைவில் தொடங்குகிறது.
ஆனால் 'ஆரம்பம்' பட ரிலீஸ் சமயம் ரெய்டு நடத்திய வருமானவரித்துறை 'வியாபார கணக்கு வழக்குகளை ஒப்படைத்தால் அலுவலகத்தைத் திறக்க முடியும்' என ரத்னத்தின் அலுவலகத்திற்கு 'சீல்' வைத்துவிட்டது. இந்த அறைக்கதவு திறக்கப்பட்டால்தான் அஜீத்தின் புதுப்படம் தொடங்கும். வருமான வரித்துறை அதிகாரிகளை அழைத்து, கணக்கு வழக்குப் பார்த்து கதவு திறக்க காத்திருக்கிறாராம் ரத்னம்.

0 comments:
Post a Comment