அவன் இவன் படத்திற்கு பிறகு மதுஷாலினி தமிழில் நடிக்கும் புதிய படம் ‘கல்பனா ஹவுஸ்’.
இப்படத்தை அறிமுக இயக்குனர் குமார் இயக்குகிறார்.
கல்பனா ஹவுஸ் படம் ஏற்கெனவே கன்னடம், தெலுங்கில் எடுக்கப்பட்டு வெற்றியை கண்டுள்ளது.
இப்படத்தில் வேணு, கார்த்திக், திரில்லர் மஞ்சு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
லியாண்டர் இசையமைக்கிறார், ஜி. பார்த்திபன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
பிரபல என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் வந்து தங்குகிறார்.
அங்கு தங்கியிருப்பவர்களில் ஒவ்வொருவராக பழி வாங்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
இதற்கு காரணம் என்ன என்பதை மைசூர் காட்டுக்குள் திகிலூட்டும் பேய் படமாக உருவாக்கி வருகிறார்கள்.
படத்தின் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக பாடல்கள் இல்லாத படமாக தயாரித்து வருகிறார்கள்.

0 comments:
Post a Comment