Sunday 2 March 2014

Leave a Comment

உத்தம வில்லனில் கே பாலசந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்...!



விஸ்வரூபம்-2 படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் மே மாதம் தான் ரிலீஸ் என்பதாக முடிவு செய்திருக்கிறார்களாம்.

இதைத் தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’.

இந்தப்படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார்.

இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க இருக்கும் இந்தப்படத்தின் வசனங்களை கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேசி மோகன் எழுதுகிறார்.

ரமேஷ் அரவிந்த் ஏற்கனவே கமலை வைத்து ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை கன்னடத்தில் இயக்கி இருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் தமிழுக்கு வர சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் அரவிந்துக்கு ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்குவதன் மூலம் தமிழிலும் இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாக ஆரம்பித்து விடலாம் என முடிவு செய்து படத்தை நாளை மறுநாள் (மார்ச்-3) படத்தை பூஜை,விழா எதுவும் இன்றி ஆரம்பிக்க இருப்பதாக ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டால் அடுத்ததாக கமிட்டாகியுள்ள ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க வசதியாக இருக்கும் என்று கமல் திட்டமிட்டுதாக தெரிகிறது.

அதற்கிடையில் இந்தப்படத்தில் காஜல் அகர்வால், தமன்னா மற்றும் த்ரிஷா என மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது அவர்கள் இல்லையென்றும் விஸ்வரூபம் தோழிகளான ஆண்ட்ரியாவும் பூஜாகுமாரும் ஒருவேளை நடித்தாலும் நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் உள்ள நடிகர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த படத்தில் கமலின் குருநாதர் கே பாலசந்தர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம்.

0 comments:

Post a Comment