ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், கமர்ஷியல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தாலும் அவ்வப்போது தனது சொந்த தயாரிப்பில் கவனிக்க வைக்கும் படங்களை கொடுக்ககூடியவர். மல்லி, டெரரிஸ்ட், உருமி, ரவிவர்மன் படங்கள் அவரது புகழைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இப்போது அவர் தயாரித்து இயக்கி இருக்கும் படம், இனம்.
சரிதா, கருணாசுடன் சுகந்தா, கரன் என்ற புதுகங்கள் நடித்திருக்கிறார்கள். இலங்கை யுத்த பின்னணியில் வாழும் ஏழை மக்களைப் பற்றிய கதை. கடந்த 2 வருடங்களாக இந்தப் படத்தை தயாரித்த சந்தோஷ் சிவன், அதை வெளியிட முடியாமல் தவித்து வந்தார். அதனை இப்போது டைரக்டர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார். இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் லிங்குசாமி பேசியதாவது:
1992ல் சினிமாவுக்கு வந்தேன். நிறைய படங்கள் டைரக்ட் செஞ்சிருக்கேன், தயாரிச்சிருக்கேன், வாங்கி ரிலீஸ் பண்ணியிருக்கேன். அந்த படங்களில் இல்லாத சந்தோஷமும், திருப்தியும் கவுரவமும் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. அவைகளில் பெறாத புகழை இந்த ஒரு படத்தில் பெறுவேன். நானும் தம்பி சுபாசும் இந்தப் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுதோம்.
இந்தப் படத்தை நான் லாப நஷ்ட கணக்கு பார்த்து வாங்கவில்லை. இந்த படம் ஒடுமா ஓடாதா என்பதை பற்றி கவலைப்பட வில்லை. இந்த படத்தை மக்களை பார்க்க செய்ய வேண்டும் என்று விரும்பினேன். படத்தை வாங்கி வெளியிடுகிறேன்.
இதில் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத ஸ்பெஷல் சைல்டு ஒருவன் நடித்திருக்கிறான். அவன் நடிப்பை பார்த்தால் இப்போது நடிப்புக்காக போற்றப்படும் ஹீரோக்கள் அவனுக்கு சல்யூட் அடிப்பார்கள். காரணம் இத்தகைய சிறுவர்களை நடிக்க வைக்க முடியாது. அவர்கள் நடிக்கும்போது படம்பிடித்துக் கொள்ள வேண்டும். அத்தனை சிரமப்பட்டு இதனை படமாக்கி இருக்கிறார்.
நான் உதவி இயக்குனராக இருந்தபோது எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் சந்தோஷ் சிவன் அல்லது பி.சி.ஸ்ரீராமுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. அவர் என் அஞ்சானில் பணியாற்றுகிறார். அவர் படத்தை நான் வாங்கியிருக்கிறேன். மனசுக்கு நிறைவாக இருக்கிறது. இவ்வாறு லிங்குசாமி பேசினார்.
0 comments:
Post a Comment