Sunday 2 March 2014

Leave a Comment

படத்துக்கு ஏ சர்டிபிகேட் - மனமுடைந்த படத்தயாரிப்பாளர் தற்கொலை முயற்சி..!



சென்சார் அதிகாரிகள் படத்தின் பல பகுதிகள் வெட்டியதாலும், படத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்ததாலும், மனமுடைந்த ஒரு தெலுங்கு படத்தயாரிப்பாளர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனால் தெலுங்கு படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் Amma Nanna Oorelithe என்ற படத்தை Jakkula Nageswara Rao என்ற தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சித்தார்த் வர்மா மற்றும் ஷில்பா ஸ்வேதா நடித்துள்ளனர். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்தசென்சார் உயரதிகாரி தனலட்சுமி, படத்தின் உள்ள 40 காட்சிகளை வெட்டும்படியும், அப்படியே வெட்டினாலும், படத்துக்கு ஏ சர்டிபிகேட்தான் கொடுப்பேன் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.


 அவரை சமாதானப்படுத்த தயாரிப்பாளரும், இயக்குனரும் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் குறித்து எவ்வளவோ எடுத்துக்கூறியும் தனலட்சுமி சமாதானம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் Jakkula Nageswara Rao, சென்சார் அலுவலகம் அருகே உள்ள மருந்துக்கடைக்கு சென்று தூக்க மாத்திரைகளை வாங்கி சென்சார் அலுவலகத்திலேயே சாப்பிட்ட்டார்.

இதனால் சென்சார் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment