Saturday 15 March 2014

Leave a Comment

பால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் உடல் எடை கணிசமாக குறையும்..! ஆய்வில் தகவல்



உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர்.

மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.

உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன.

ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.

அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.


எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆய்வு இருக்கட்டும் நம் ஊர் பாட்டி வைத்தியம் ஒன்னு சொல்றேன் கேளுங்க , பால் கலக்காத டீயில் ஒரு ஸ்லைஸ் லெமன் துண்டை நறுக்கிபோட்டு குடியுங்க பிந்தம், பேதி, வய்ற்று வலி போன்ற வயிற்று கொலறேல்லாம் மறைந்திடும்.

0 comments:

Post a Comment