கார்த்திக் சுப்புராஜ் இன்னொரு பாரதிராஜாவாக உருவெடுப்பார் என்று இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
பீட்சா வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி விரைவில் வெளிவரவுள்ள படம் ‘ஜிகர்தண்டா’. இதில் சித்தார்த் நாயகனாகவும், லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
இயக்குனர் பாரதிராஜா, கலைப்புலி எஸ். தாணு படத்தின் இசையை வெளியிட்டார்கள். மேலும் விழாவில் இயக்குனர்கள் S.J.சூர்யா, பாலாஜி சக்திவேல், ராம், ‘கிரீடம்’ விஜய், பாலாஜி தரணிதரன், நலன் குமாரசாமி, ‘தெகிடி’ ரமேஷ், கார்ட்டூனிஸ்ட் மதன், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பாராதிராஜா, ‘‘மதுரையை மையமாக வைத்து படம் எடுப்பது பெருமையாக உள்ளது. அதே சமயத்தில் மதுரை என்றாலே கொலை, அன்டர்வேர்ல்டு சமச்சாரங்கள் அதிகமாக நடப்பது போல காண்பிக்கிறார்கள். அது தவறு.
ஒருகாலத்தில் மதுரை அப்படி இருந்த்திருக்கலாம், ஆனால் இப்போது அப்படியில்லை. படத்தில் வன்முறையை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுவே, அதனை தூண்டிவிடும்படியாக இருந்துவிடக் கூடாது. சித்தார்த் அருமையான நடிகர்.
ஒப்பனையில்லாமல் அதாவது நடிப்பது தெரியாமல் நடிப்பவர். இன்றுவரை நானா படேகர் நடிப்பது தெரியாது.
அவரது நடிப்பு இயற்கையாக இருக்கும். அவருக்கு பிறகு சித்தார்த் நடிப்பது தான் இயற்கையாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் மட்டும் அவர் நடிப்பது தெரிகிறது.
அபாரமான திறமை கொண்டவர் ‘ஜிகர்தண்டா’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அவருடைய உருவத்தைப்போலவே திறமையும் கொண்டவர். ‘ஜிகர்தண்டா’ படத்தின் காட்சிகளும், பாடலும் நன்றாக இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெற்றுதரும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா, ‘’கார்த்திக் சுப்புராஜின் ரசிகன் நான். ‘பீட்சா’ என்ற படத்தின் கதையை யோசித்து, அந்தக் கதை நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வைத்து அதை வெற்றிப்படமுமாக்கிய கார்த்திக் சுப்பராஜின் தன்னம்பிக்கைக்குப் பாராட்டுக்கள்.
பாரதிராஜா சார் தொடர்ந்து வித்தியாசமான வெற்றிப்படங்களைக் கொடுத்ததற்கு அவரின் பிரைன் எனர்ஜிதான் காரணம். அந்த எனர்ஜி கார்த்திக் சுப்புராஜிடமும் இருக்கிறது. நிச்சயமாக கார்த்திக் சுப்புராஜ் இன்னொரு பாரதிராஜாவாக உருவெடுப்பார்’’ என்றார்.

0 comments:
Post a Comment