மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போல், சிவங்கை மாவட்டத்தில் மக்களிடம் நிஜ ஹீரோவாக வாழ்ந்த வீரன் முத்துராக்கு என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அதே பெயரில் புதிய படம் உருவாகிறது.
சிலம்பாட்ட கலை, காதல், ஆக்ஷன் கலந்து உருவாகும் இதில் கதிர் ஹீரோ.
இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘வெளுத்துக்கட்டு‘ படத்தில் நடித்தவர்.
ஹீரோயினாக லியாஸ்ரீ நடிக்கிறார். மற்றும் சண்முகராஜன், நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கே.சண்முகம் தயாரிப்பு. எஸ்.வி. ஜி இசை. சி.ராஜசேகர் டைரக்ஷன்.
அச்சன்குளம், ஆலங்குளம் ஆகிய 2 கிராமத்து மக்களிடையே உள்ள ஆக்ரோஷம்தான் மைய கரு.
இப்படம் பற்றி இயக்குனர் ராஜசேகர் கூறியது:
நிஜ கதைகள் எப்போதுமே தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, கரிமேடு கருவாயன் உள்ளிட்ட படங்கள் அந்த ரகம்தான்.
சட்டத்துக்கு முன் குற்றவாளியாக தெரியும் ஒருவர், மக்களுக்கு ஹீரோவாக இருப்பார்.
அதுபோன்ற ஹீரோக்களின் கதைகளை திரையில் காட்டும்போதெல்லாம் படம் ஹிட்டாகும்.
அதில் திரைக்கதையை சுவாரஸ்யமாக எழுதலாம். அதுபோன்ற ஒரு படம்தான் வீரன் முத்துராக்கு.
இந்த படம் ரசிகர்களை கவரும். மற்றொரு மலையூர் மம்பட்டியானாக இது அமையும். இவ்வாறு ராஜசேகர் கூறினார்.

0 comments:
Post a Comment