Monday, 3 March 2014

Leave a Comment

பழசுலாம் இனி புதுசாகப்போகுதுங்க...!



அலியாபட் அம்மாவாக 7 வருடத்துக்கு பிறகு இந்தி படத்தில் தமிழ் பேசி நடிக்கிறார் ரேவதி.


தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைகாட்டிக் கொண்டிருக்கிறார் மண்வாசனை ரேவதி. ஒஸ்தி படத்தில் சிம்புவின் அம்மாவாக நடித்தார்.


இதற்கிடையில் இந்தியில் ‘பிர் மிலேங்கே‘ என்ற படத்தை இயக்கினார். ‘நிஷப்த்‘ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்படம் நடித்து 7 வருடத்துக்கு பிறகு மீண்டும் ‘2 ஸ்டேட்ஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.


 பாலிவுட் இளம் ஹீரோயின் அலியாபட் அம்மாவாக வேடம் ஏற்கும் ரேவதி தமிழ் பெண்ணாக நடிக்கிறார். சமீபகாலமாக பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு கோலிவுட் மார்க்கெட்டை பற்றிய சிந்தனை நிறையவே வந்திருக்கிறது.


‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ என்ற படத்தில் நடித்த ஷாருக்கான் அப்படத்தில் சத்யராஜை முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இதே படத்தில் டெல்லி கணேஷும் நடித்திருந்தார்.


இதுபோல் கேரக்டர் ரோல்களில் நடிக்க தமிழ் நடிகர்களை நாடுகிறார்கள். பிரகாஷ்ராஜ், நாசர் இந்தியில் பல படங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் கோரி தேரா பியார் மேபடத்தில்நிழல் கள் ரவி நடித்தார்.

0 comments:

Post a Comment