உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற மார்ச் 3 ஆம் தேதி
துவங்கவுள்ளன.
கமல்ஹாசன் எழுதி, இயக்கியிருக்கும் விஷ்வரூபம் -2 திரைப்படத்தின் வேலைகள் நிறைவுற்று படம் வருகிற மே மாதம் வெளியாகவுள்ளது. விஷ்வரூபம் -2 திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கவுள்ள திரைப்படம் உத்தமவில்லன்.
நகைச்சுவையை மையப்படுத்தித் தயாராகவுள்ள இப்படத்தினை கன்னட நடிகரும், கமல்ஹாசனின் நீண்ட நாள் நண்பருமான ரமேஷ் அர்விந்த் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் உலக நாயகன் நான்கு டீன் ஏஜ் பெண்களின் அப்பாவாக நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. மேலும்
இயக்குனர் கே.பாலச்சந்தர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் அதிகக் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன் இப்படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் வருவதாகவும், அதற்கு மேக்கப்பிற்கு மட்டுமே சுமார் 8 மணி நேரங்கள் வரை செலவிடப்போவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் என்.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

0 comments:
Post a Comment