Saturday 15 March 2014

Leave a Comment

ஒரு நடிகை கல்யாணம் பண்ணா இப்படித்தான் நடக்கும் - வடபோச்சே..!



மீண்டும் நடிக்க வரும் நவ்யா நாயர், 17 வயது பெண்ணுக்கு அம்மா வேடம் ஏற்கிறார்.

அழகிய தீயே, அமிர்தம், மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில நடித்திருப்பவர் நவ்யா நாயர். இவர் மும்பை தொழில் அதிபர் சந்தோஷ் மேனனை கடந்த 2010ம் ஆண்டு மணந்தார்.

 பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தில் மீனா நடித்த வேடத்தை கன்னட ரீமேக்கில் ஏற்கிறார்.

இதுபற்றி நவ்யா கூறியதாவது: என் பையனுக்கு 3 வயது ஆகிறது. அவனை வளர்ப்பதில்தான் எனது முழு கவனமும் இருக்கிறது. படங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

ஆனால் த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க பி.வாசு என்னை கேட்டபோது அந்த வாய்ப்பை தவற விட விரும்பவில்லை.

 அப்படத்தை நான் பார்த்தேன். அதில் 17 வயது பெண்ணுக்கு அம்மா வேடம். அதனால் எனக்கு எந்த கவலையும் இல்லை.

 நல்ல கேரக்டர் என்பதாலேயே நடிக்கிறேன். மீனா கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். நிஜத்தில் நான் கிராமத்து பெண்.

கிராமத்து பெண்கள் டி.வியால் கவரப்பட்டிருக்கிறார்கள். சினிமாவும் அதைவிட பெரிய தாக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

இது என்னுடைய ரீ என்ட்ரி படமாக இருக்கும். ஏற்கனவே கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன்.

திருமணத்துக்கு முன்பு நடிப்புதான் எனக்கு சோறு போட்டது. அதனால் அதை மறக்க மாட்டேன். இவ்வாறு நவ்யா நாயர் கூறினார்.

0 comments:

Post a Comment