Monday, 3 March 2014

Leave a Comment

என் மீது உள்ள பொறாமையில் வதந்தியை பரப்பிவிடுகிறார்கள்..!



நான் பெரிய படங்களில் நடிப்பதால் பொறாமையால் சிலர் வதந்திகளை பரப்பிவிடுகிறார்கள் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

டோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. தற்போது அவரது நேரம் மிகவும் நன்றாக உள்ளது.

அம்மணி கோலிவுட்டின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் குறித்த வதந்திகள் பற்றி சமந்தா விளக்கம் தெரிவித்துள்ளார்.

அஞ்சான் பட விளம்பரங்களில் சமந்தாவின் புகைப்படம் இல்லாததால் அவர் கோபத்தில் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சாக கிடந்தது.

லிங்குசாமி-சூர்யாவுடன் சேர்ந்து பணியாற்ற பல காலம் காத்திருந்தேன். தற்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்து அவர்களுடன் பணியாற்றி வருகிறேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

நான் அஞ்சான் பட விளம்பரங்கள் குறித்து கோபமாக உள்ளதாக வரும் தகவல்கள் எல்லாம் வெறும் வதந்தியே. அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சமந்தா.

நான் பெரிய படங்களில் நடிப்பதால் சிலர் என் மீது உள்ள பொறாமையால் என்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று சமந்தா கூறினார்.

சமந்தா தற்போது விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சமந்தா தான் நாயகி என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment