Tuesday, 4 March 2014

Leave a Comment

மார்ச் 6ல் 'டாணா' ஷூட்டிங்...!



சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாணா' படத்தின் ஷூட்டிங் மார்ச் 6ல் தொடங்குகிறது.

தனுஷ் தயாரிப்பில் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 'எதிர் நீச்சல்'. ப்ரியா ஆனந்த், நந்திதா, சதீஷ் ஆகியோர் நடித்த இப்படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்தது.

அந்த ஹிட் சென்டிமென்ட் காரணமாக, மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. இந்தப் படத்துக்கு 'டாணா' என்று டைட்டில் வைத்துள்ளனர்.

தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை துரை. செந்தில்குமார் இயக்குகிறார். இதில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை. ஸ்ரீதிவ்யா சிவாவுக்கு ஜோடியாக நடிக்கிரார்.

'மைனா', 'கும்கி' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் 'டாணா' படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 'மான் கராத்தே' படத்தின் ஒளிப்பதிவாளாரும் சுகுமார்தான்.

'டாணா' படத்தின் ஷூட்டிங் மார்ச் 6ல் இருந்து தொடங்குகிறது.

0 comments:

Post a Comment