‘ஜெயம்’ ரவி, த்ரிஷா நடிக்கும் புதிய படம் ‘பூலோகம்’. இப்படத்தை ‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது இந்தப் படம். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.
ஏற்கெனவே அவர் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திலும் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். மேலும் பிரபல அமெரிக்க நடிகருமான ‘நாதன் ஜோன்ஸ்’ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘பூலோகம்’ படத்தின் போது சில முக்கிய காட்சிகள் மயானக் கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது.
தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக கொண்டாடப்படும் மயானக் கொள்ளை திருவிழா நேற்று தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முழுமையாக காண சென்னை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் விஜயம் செய்தனர்.
இந்த விழாவை கண்ட ஜெயம் ரவி, ‘இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பது எனக்கு அளவிட முடியாத பெருமை.
பூலோகம் போன்ற 'மாஸ்' கதையும், கதைக் களமும் என்னை மக்களிடம் மிக எளிதாக ஐக்கியமாக்கி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை' என்றார்.
0 comments:
Post a Comment