Saturday, 1 March 2014

Leave a Comment

என் வீட்டு விசேஷத்திற்கு வாங்க - அழைப்பு விடுக்கும் ரஜினிகாந்த்...!



 ரஜினிகாந்த் வீட்டில் வரும் மார்ச் மாதம் 11ம் தேதி விசேஷம் ஒன்று நடக்கிறது. பெயருக்குள்ளே காந்தம் வைத்திருக்கும் ரஜினிகாந்திற்கு அந்த பெயரை வைத்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?.

அவரே தான். இயக்குனர் பாலசந்தரே தான் சிவாஜிராவ் கெய்க்வாட்டிற்கு ரஜினிகாந்த் என்ற பெயரை சூட்டினார்.

சரி அதற்கு இப்பொழுது என்ன என்று கேட்கிறீர்களா?.

விஷயம் இருக்கிறது தொடர்ந்து படியுங்கள்

சிவாஜிராவ் கெய்க்வாட் ரஜினிகாந்தாக ஆனது மார்ச் 11ம் தேதி. இதையடுத்து தான் ரஜினிகாந்தாக ஆன நாளை சூப்பர் ஸ்டார் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறார்.

ஆண்டுதோறும் மார்ச் 11ம் தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நண்பர்கள் மற்றும் தனது வெற்றிக்கு உதவிய திரை உலகினருக்கு விருந்து கொடுப்பார்.


இந்த ஆண்டும் அதே போன்று விருந்து கொடுக்கவிருக்கிறார். வரும் 11ம் தேதி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போதே நடந்து வருகின்றன.


ஆண்டுதோறும் மார்ச் 11ம் தேதி நடக்கும் விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் அனைத்தும் லதா ரஜினி தனது கையால் சமைப்பது என்பது குறிப்பிடத்தக்கது.


ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா விருந்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெறுகிறது. படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 11ம் தேதி ஆகும்.

0 comments:

Post a Comment