Saturday, 1 March 2014

Leave a Comment

கமல்ஹாசன் படத்திற்கு திடீர் மாற்றமாக இசைஞானி இளையராஜா இசை..!



மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இந்திய சினிமாக்களில் மிக முக்கியமான திரைப்படம் என்று பாராட்டப்படும் திரிஷ்யம் தமிழ்
ரீமேக்கிற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாக கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளன. திரிஷ்யம் படத்தின் ஒரிஜினல் வெர்சனை இயக்கிய இயக்குனரான ஜீத்து ஜோஷப் தமிழிலும் இயக்கவுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசனின் பல்வேறு வெற்றிப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

 முக்கியமாக உலக நாயகன் கமல்ஹாசனின் ஆரம்பகாலத் திரைப்படங்கள் பலவற்றிற்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார்.

இருப்பினும் திரிஷ்யம் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment