நீங்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப் போகிறீர்களா? அதற்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை கவனத்தில் கொள்வது நல்லது.
எந்த துறைகளில் முதலீடு செய்யப் போகிறீர்கள்..?
பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் நீங்கள் முதலீடு செய்ய முடிவெடுத்தால், எந்தெந்த துறைகளைச் சார்ந்த பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து அந்த துறைகள் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும்.
கடந்த கால செயல்பாடு
பரஸ்பர நிதிகளின் தற்போதைய என்ஏவி (நெட் அசட் வேல்யு)ஐ பார்க்க வேண்டும். அதுபோல் அந்த நிதிகளின் கடந்த கால செயல்பாடு மற்றும் அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் அந்த நிதிகளின் என்ஏவி அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அதன் என்ஏவி மதிப்பு சுமாராக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.
பரஸ்பர நிதி ரேங்கிங்
சிஆர்ஐஎஸ்ஐஎல் ஒவ்வொரு காலாண்டிலும் பரஸ்பர நிதி ரேங்கிங்கை இணையதளத்தில் வெளியிடுகிறது. இந்த ரேங்கிங் பொருளாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்த ரேங்கிங்கை பார்த்து அதன் மூலம் நீங்கள் முதலீடு செய்யப் போகும் பரஸ்பர நிதியின் போட்டியாளர்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இதர முக்கிய குறிப்புகள்
பரஸ்பர நிதியின் அளவு மற்றும் அவற்றின் காலம் ஆகியவற்றை பார்க்க வேணடும். பெரிய அளவில் இருக்கும் பரஸ்பர நிதிகளில் பெரும்பாலும் நிறையப் பேர் முதலீடு செய்திருப்பர். அதுபோல் அதிகமான தொகையையும் முதலீடு செய்திருப்பர். ஒரு வேளை இரண்டு நிதிகள் சமமான அளவிலான என்ஏவி மதிப்பைக் கொண்டிருந்தால், எந்த நிதி குறைந்த காலத்தில் என்ஏவி மதிப்பைப் பெற்றது என்பதைப் பார்த்து அதில் முதலீடு செய்ய வேண்டும்.
எனினும் பரஸ்பர நிதிகள் அனைத்தும் மார்க்கெட் நடவடிக்கைகளைப் பொறுத்து அவை ஏறும் அல்லது இறங்கும். எனவே இந்த பரஸ்பர நிதிகள் நிறைய லாபத்தைத் தரும் என்று உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் முதலீடு செய்வதற்கு முன்பாக பரஸ்பர நிதிகளை ஆராய்ந்து பார்த்து சரியான நிதியில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
0 comments:
Post a Comment