தனக்கு இப்பொழுதெல்லாம் படத்தில் நடிக்கவே பிடிக்கவில்லை என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடிகை சங்கீதா நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் போது சிம்பு மனம் திறந்து சில விஷயங்கள் பற்றி பேசினார். அதில் சிலவற்றை பார்ப்போம்.
சினிமாவின் அனைத்து நிலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அது தானாக அமைந்த ஒன்று. ஒரு சில படப்பிடிப்புகளின்போது சினிமா பற்றி தெரிந்திருக்காமல் இருக்கக் கூடாதா என்று தோன்றும்.
சினிமாவின் பலதரப்பு பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால் சில படப்பிடிப்புகளில் நடக்கும் தவறுகள் எனக்கு தெரிந்துவிடும். என்ன செய்ய முடியும்.
தற்போது எல்லாம் எனக்கு படம் பண்ணவே பிடிக்கவில்லை. சினிமாவை தாண்டி வேறு ஏதாவது செய்தால் என்ன என்று தோன்றுகிறது.
சின்ன வயதில் ரஜினி சார் மாதிரி ஆக வேண்டும். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் 29 வயதுக்கு மேல் வாழ்க்கை வேற மாதிரி இருக்கின்றது.
சினிமா என்கிற ஒரு வட்டத்திற்குள் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதில் இருந்து வெளியேற வேண்டும். சினிமாவை தாண்டி உலகிற்கு ஏதாவது செய்ய வேண்டும்.
எனக்கு பணம் என்றாலே பிடிக்கவில்லை. பணத்தால் மனிதாபிமானம் போய்விட்டது என்று நினைக்கிறேன். பணத்தால் நல்லவர்கள் கூட தீயவர்கள் ஆகிறார்கள். சமூகம் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. பொறாமை அதிகரித்துவிட்டது. இதற்கு எல்லாம் பணம் தான் காரணம். உலகத்தில் பணம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
யாராவது வந்து உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதா என்று கேட்டால் எனக்கு அப்படி ஒரு ஆசையே இல்லை என்பேன். என்னிடம் போட்டி, பொறாமை, கோபம் இல்லை. படத்தின் வெற்றி, தோல்வி என்னை பாதிக்காது என்றார் சிம்பு.
0 comments:
Post a Comment