Sunday 16 March 2014

Leave a Comment

ஊர் ரெண்டுபட்டதால எனக்கு கொண்டாட்டம் - நந்திதா...!



மனிஷா நீக்கப்பட்ட வேடத்தில் நந்திதா நடிக்கிறார். பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தில் நடித்தவர் மனிஷா யாதவ்.

அடுத்து சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஷூட்டிங்கிற்கு கொடைக்கானல் சென்றார்.

அவரை வைத்து காட்சிகள் படமாக்கிய சீனு, தமிழ் வசனம் புரியாமல் நடித்தால் அது வேடத்துக்கு பொருத்தமாக இருக்காது என்றுகூறி அவரை அந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்றதுடன் படத்தில் வரும் மற்றொரு கதாபாத்திரத்தில் நடியுங்கள் என்றார்.

இது மனிஷாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அப்படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்ததுடன் சீனு ராமசாமி மீது சரமாரியாக குற்றச்சாட்டு கூறினார்.

மேலும் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

அதில்  இயக்குனர் சீனு, தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறி இருந்தார்.

பின்னர் கொடைக்கானல் குளிர் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை, ஷூட்டிங்கிலிருந்து வந்துவிட்டேன் என்று பல்டியடித்தார்.

மனிஷா யாதவ் நீக்கப்பட்ட கேரக்டரில் தற்போது அட்டகத்தி நந்திதா நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக இவர் நடிக்கிறார்.

ஏற்கனவே இவர்கள் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தனர்.

0 comments:

Post a Comment