Saturday 1 March 2014

Leave a Comment

டாப்சி`யின் அதிரடி ஆபாசத்தால் திணரும் கோடம்பாக்கம்..!



தனுஷ் நடித்த வெற்றிப்படமான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி அதன் பின்னர் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கே சென்ற நடிகை டாப்சி பிகினியில் நடிப்பதற்குத் தயார் என்று கூறியுள்ளாராம்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் டாப்சி.
அறிமுகப்படம் வெற்றிப்படமென்றாலும் அதன் பிறகு இவர் நடித்த வந்தான் வென்றான் பெருமளவில் பேசப்படவில்லை. இதனால் இவருக்குத் தமிழில் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.

தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும் தெலுங்குத் திரையுலகம் இவரை வரவேற்று ஏற்றுக் கொண்டு முன்னணி நடிகையாக்கியது. தெலுங்கில் கொஞ்சம் தாராளமாகக் கவர்ச்சி காட்டியும் நடித்தார்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவில் தலைகாட்டாத டாப்சி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான தல அஜித்தின் ஆரம்பம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்குத் திரும்பினார். இப்படத்திற்குப் பின்னர் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் முனி பார்ட் -3ல் முக்கிய நடிகையாகவும் நடித்துவருகிறார்.

தமிழில் சினிமாவில் ஒரு நல்ல நிலையைப் பிடிக்க கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளாராம். பிகினி உடை அணிந்து நடிப்பது சாதாரண விஷயம் என்று கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது முறையாகத் தமிழுக்கு வந்திருக்கும் டாப்சி இம்முறை வெற்றிபெருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 comments:

Post a Comment