Saturday, 1 March 2014

Leave a Comment

உங்களுக்கு ரீ - என்ட்ரி எல்லாம் சரிபடாது.. ராதிகாவை அவமானப்படுத்திய இயக்குனர்...!



குட்டி ராதிகாவை 5 கிலோ எடை குறைக்க சொல்லி நிபந்தனை விதித்திருக்கிறார் இயக்குனர். ‘இயற்கை‘, ‘வர்ணஜாலம்‘, ‘மீசை மாதவன்‘ போன்ற படங்களில் நடித்திருப்பவர் குட்டி ராதிகா.

இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்துகொண்டு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

 தமிழில் விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘பாண்டியநாடு‘ என்ற படம் கன்னடத்தில் ‘ருத்ரதாண்டவா‘ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. லட்சுமிமேனன் ஏற்ற வேடத்தை ராதிகா ஏற்கிறார்.

இதுபற்றி அப்பட இயக்குனர் குரு தேஷ்பாண்டே கூறும்போது,‘ராதிகா இதுவரை ஏற்று நடிக்காத டீச்சர் வேடத்தை முதன்முறையாக ஏற்கிறார்.

அவரிடம் வேடத்துக்காக உடல் எடையை 5 கிலோ குறைக்கும்படி சொல்லி இருக்கிறேன்.

அவரும் அதற்கான டயட் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த மாதம் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

தமிழிலிருந்து இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுவதால் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்கள் செய்யப்படும். ஹீரோ யார் என்பது சில நாட்களில் முடிவாகும் என்றார்.

0 comments:

Post a Comment