Thursday, 20 February 2014

Leave a Comment

தமிழ் படங்களுக்கு ''நோ''...தெலுங்குப் படத்திற்கு ''ஓகே'' சொன்ன ஐஸ்வர்யா ராய்..!



கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்திற்கு “ஐஸ்வர்யாவும்
ஆயிரம் காக்காவும்” என்று தலைப்பிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஐஸ்வர்யா ராய் இச்செய்தியினை மறுத்துள்ளார். மேலும் தான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும், பி வாசு என்பவர் யாரென்றே தெரியாதென்றும் கூறியுள்ளார். தனது அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு பத்திற்கும் மேற்பட்ட கதைகள் வருவதாகவும், அவற்றில் ஒன்றாக இந்தக் கதை வந்திருக்கலாம் என்றும் தான் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தனது அனுமதியில்லாமலே எப்படி தான் நடிப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள் என்றும் ஆச்சர்யப்பட்டுள்ளார். சமீபமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா ஆகியோர் நடிக்கவுள்ள தெலுங்குப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment